மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.ஆலயத்தின் ஆண்டு வைகாசி மாத தீமிதி உற்சவம் கடந்த 12ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தினம்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன 15 ஆம் நாள் உற்சவமாக தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக காவிரி தீர்த்தப்படித்துறையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர் பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர் தொடர்ந்து இரவு திரௌபதி அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 27 மே, 2025
Home
ஆன்மீகம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் 106 ஆம் ஆண்டு திமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் 106 ஆம் ஆண்டு திமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக