மயிலாடுதுறை: தமிழகத்தில் விவசாய பணிகளில் ஈடுபடும் மேற்கு வங்க தொழிலாளர்கள் நடவுபணி களைப்பு தெரியாமல் இருக்க பெங்காலி பாடல்களை பாடி உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதை கணக்கில் கொண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை துவங்கும் நிலையில் பல விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை நடப்பாண்டு துவங்கியுள்ளனர். நிலத்தை உழுது சமன்செய்து, உழவடித்து நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய பணிகளுக்கு தேவையான கூலி தொழிலாளர்கள் கிடைக்காததால் இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டாலும் பல விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் மூலமே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுவிடுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பலர் கடந்த 3 வருடங்களாக வடமாநில தொழிலாளர்களை களம் இறக்கி திருந்திய நெல்சாகுபடி முறையில் கைநடவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் விவசாயி மகோதேவன் என்ற விவசாயி 40 ஏக்கர் நிலத்தில் முன்பட்ட குறுவை நடவு செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் மேற்குவங்கம் மாநில கூலி தொழிலாளர்களை நடவு செய்ய களம் இறக்கியுள்ளார்.
வியாழன், 24 ஏப்ரல், 2025
தமிழகத்தில் விவசாய பணிகளில் வட மாநிலத்தவர்: களைப்போக்க பெங்காலி பாடல்!
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக