கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உயரமான, செங்குத்தான பகுதிகளில் வாழும் வரையாடுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அழிவின் பட்டியலில் உள்ள விலங்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில் ரூ.25.24 கோடி செலவில் நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 1031 வரையாடுகள்
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 13 வரையாடு வாழிடங்களில் உள்ள 140 பகுதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 1031 வரையாடுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 24 துவங்குகிறது.
233 சதுர கி.மீ பரப்பளவில் சுமார் 2000 கி.மீ கணக்கெடுப்பு பணி
நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 14 வரையாடுகள் வாழிடங்களில் உள்ள 176 பகுதிகளில் கேரள மாநில வனத்துறையினருடன் இணைந்து இன்று (ஏப்ரல் 24) முதல் வருகிற 27 ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதில் பெண் வரையாடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குட்டிகளை ஈனும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பது அவற்றின் எண்ணிக்கையை சரியாக அறிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு பணி 233 சதுர கி.மீ பரப்பளவில் சுமார் 2000 கி.மீ தொலைவிற்கு நடத்தப்பட உள்ளது.
வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்
அதன்படி இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று கோவை-அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, தமிழ்நாடு வன உயர் பயிற்சியக இயக்குநர் சேவா சிங், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பட்டயத்தினை திறந்து வைத்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கணக்கெடுப்பு பணிகளுக்கான உபகரணங்களை களப்பணியாளர்களுக்கு வழங்கினார். இதன் பின்னர் வரையாடு கணக்கெடுப்பு வாகனத்தினை கொடியசைத்து அவர் துவக்கி வைத்தார்.
வியாழன், 24 ஏப்ரல், 2025
Home
செய்திகள்
10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட 'மாநில விலங்கு''; இன்று முதல் 4 நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பு பணி!
10 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட 'மாநில விலங்கு''; இன்று முதல் 4 நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பு பணி!
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக