ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கைசிக ஏகாதசி திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருத்தலமாக விளங்கும் இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் நான்கு முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் நடைபெறும் கைசிக திருவிழா மிகுந்த முக்கியத்துவம் கொண்டது.
இதையொட்டி கோவிலில் பொலிந்து நின்றபிரான் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆதி நாயகி, குருகூர் நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினர். நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர்களும் குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் அண்ணாவியார் பாலாஜி ஆதிநாதர் பெருமாள் முன்னிலையில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் சடாரி வழங்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாடவீதியைக் களைகட்டச் சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்ற கருடசேவையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்த புனித நிகழ்வில் எம்பெருமானார் ஜீயர் சுவாமி, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன் உள்ளிட்டோர், மேலும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செவ்வாய், 2 டிசம்பர், 2025
ஆழ்வார்திருநகரியில் கைசிக கருடசேவை சிறப்பு – பக்தர்கள் திரளாக பங்கேற்பு
Tags
# ஆன்மீக தகவல்கள்
About bmstelevision
ஆன்மீக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மீக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக