திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை – கோலாகல ஏற்பாடுகள் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 1 டிசம்பர், 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை – கோலாகல ஏற்பாடுகள்

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று நடைபெற உள்ளது. தீபத் திருவிழா நெருங்கியுள்ள நிலையில் திருவண்ணாமலை முழுவதும் பண்டிகை உணர்வு பெருகி வருகிறது. கடந்த நவம்பர் 24 அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியதையடுத்து, கோயிலும் நகரமும் பக்தர்களால் நெரிசலடைகிறது. அதிகாலையில் பரணி தீப ஏற்றம் நாளை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பின்னர், ஆண்டில் ஒருமுறை மட்டுமே வெளிவரும் அர்த்தநாரீஸ்வரர் காலை 6 மணியளவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். அந்நேரத்தில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மாலை 6 மணிக்கு மகாதீபம் திருவண்ணாமலை மலை உச்சியில், 2668 அடி உயரத்தில், மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். காப்பரையில் எரியும் இத்தீபத்தை காண தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகிறார்கள். பாதுகாப்பிற்காக 15,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பக்தர்கள் வசதிக்காக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிரிவலம் – இரண்டு நாட்கள் கூட்டம் பெளர்ணமி டிசம்பர் 4 காலை 7.18 மணிக்கு தொடங்குவதால், தீப நாளிலும் அடுத்த நாளிலும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் அதிக அளவில் திரள உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad