மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் அபார ஏற்பாடுகள்
மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் ஒரு பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தவிர, ஆந்திர, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக,
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் நேரில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
அவர்களின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கவுள்ளர் எனக் கணிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள், திடலில் பக்தர்களுக்கான குடிநீர், மருத்துவம், காவல் பாதுகாப்பு, திரை ஏற்பாடுகள் உள்ளிட்டவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் பங்கேற்பார் என்ற வதந்திக்கு விளக்கம்
இதற்கிடையே, மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், அந்த தகவல் பொய்யானது என நடிகரது தரப்பில் உத்தியோகபூர்வ விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சினிமா பி.ஆர்.ஓ. ரியாஸ் அகமது தனது 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) பக்கத்தில்,
“ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்ற செய்தி தவறானது. தலைவர் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை,”
என தெளிவாக தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்துடன், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவனிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனி, 21 ஜூன், 2025
ரஜினிகாந்த் பங்கேற்பார் என்ற வதந்திக்கு விளக்கம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக