மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்

 

சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து தங்கம் விலையானது நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலையானது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தங்கம் விலையானது ஏப்ரல் 22-ம் தேதி ஒரு சவரன் ரூ74,320-க்கு விற்பனையாகி உதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலையானது மேலும் அதிகரிக்கும் என்று நினைத்திருந்த நிலையில் மீண்டும் இறமுகத்தில் வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ8950-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.8995-க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கு விற்பனையான நிலையில் இன்றும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad