இன்றும் குறைந்தது தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

இன்றும் குறைந்தது தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.2200 அதிகரித்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.2200 குறைந்து ரூ.72,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9,005-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad