ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்படும் கோவில்! - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்படும் கோவில்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோவில். இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இக்கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே மகாவிஷ்ணு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாக போற்றப்படுகிறது. `சார் தாம்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் இந்த பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று. பத்ரிநாத் கோவிலின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. அங்குள்ள வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள். இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது. பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன்பாக, இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம். இமயமலையில் நிலவும் அதீத குளிர் காரணமாக இந்த ஆலயம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (மட்டுமே திறந்து வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad