மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில், ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளுக்காக இலவச உணவு வழங்கும் திட்டம் துவங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் பசியை போக்கும் வகையில், சோறு, சாம்பார், வத்தல், குழம்பு, பொரியல், பாயாசம் மற்றும் மோர் உள்ளிட்ட ஆறு சுவை உணவுகள் வழங்கப்படுகின்றன.
சமூக சேவகர் கே.பி. ராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து, செம்பனார்கோவில் பகுதியில் ஏழை மக்களும், பசி காத்திருக்கும் குழந்தைகளும், மாணவர்களும் தினமும் ஆர்வத்துடன் உணவு பெறக்கூடிய விதமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக வணிகர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் அனைவரும் ஆர்வத்துடன் உணவை எடுத்துக் கொண்டு வாழ்த்தினர். மக்கள் தொடர்ந்து தினமும் இதே மாதிரி உணவு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்துள்ளனர். வணிகர் சங்கத்தினால் இதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படவிருப்பதாகவும், இதுபோன்று ஒவ்வொரு பகுதியில் ஏழைகளின் பசியை போக்கும் திட்டங்களை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்கள், 1 டிசம்பர், 2025
மயிலாடுதுறை: செம்பனார்கோவில் இலவச உணவு திட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக